2023 செப்டம்பர் 04-08-க்கான ஃபாரெக்ஸ் மற்றும் கிரிப்டோகரன்ஸிகள் ஆகியவற்றின் முன்கணிப்பு

யூரோ/யுஎஸ்டி: விகித உயர்வுக்கு இல்லை, டாலர் மதிப்பிற்கு ஆம்!

  • சந்தைப் பங்கேற்பாளர்கள் அமெரிக்காவில் உள்ள மேக்ரோ பொருளாதாரப் பின்னணியைத் தொடர்ந்து ஆய்வு செய்து, ஃபெடரல் ரிசர்வ் ஃபெடரல் நிதி விகிதத்தை மேலும் அதிகரிக்குமா என்பதை அறிய (அல்லது ஊகிக்க) முயற்சி செய்கிறார்கள். ஏமாற்றமளிக்கும் நுகர்வோர் நம்பிக்கை அறிக்கைகள், பலவீனமான ஏடிபி தொழிலாளர் சந்தை தரவு மற்றும் 2வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலை ஆகியவற்றைத் தொடர்ந்து, சந்தை உரையாடல் மந்தநிலை, அமெரிக்க கட்டுப்பாட்டாளரின் டோவிஷ் பிவோட் சாத்தியக்கூறுகளை நோக்கி மாறியுள்ளது. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி தற்போது எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. இருப்பினும், திருத்தப்பட்ட ஜிடிபி மதிப்பீடு சந்தைகளை ஏமாற்றமடையச் செய்தது.

    மறுபுறம், குடும்பச் செலவுகள் மாதத்திற்கு மாதம் 0.8% அதிகரித்தன, இது ஜனவரி மாதத்திற்குப் பிறகு அதிக விகிதமாகும். ஃபெடரல் ரிசர்வ் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கும் பணவீக்கக் குறிகாட்டியான தனிநபர் நுகர்வுச் செலவுகள் (பிசிஇ) குறியீடு, தொடர்ந்து இரண்டாவது மாதமாக மாதந்தோறும் 0.2% சேர்த்தது. வளர்ச்சி மிதமானதாக இருந்தாலும், அது வளர்ச்சிதான். முக்கிய பிசிஇ ஆண்டுக்கு ஆண்டு 4.2% உயர்ந்தது, முன்கணிப்புக்களுக்கு இசைவாக உள்ளது, ஆனால் முந்தைய மாத எண்ணிக்கையான 4.1%-ஐ விட அதிகமாக இருந்தது.

    தொழிலாளர் சந்தை நிலைமை "தொடர்ச்சியாக வலுவானது" என்பதிலிருந்து "சவால்கள் நிறைந்ததாக" மாறியுள்ளது. ஜோல்ட்ஸ் அறிக்கையின்படி, பொது வேலை காலியிடங்களின் எண்ணிக்கை, நீண்டகாலத்திற்குப் பிறகு முதல் முறையாக ஜூலையில் 8.827 மில்லியனாகக் குறைந்துள்ளது. ஒரு ஆண்டிற்கும் மேலாக, இது பெரும்பாலும் 10 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது, இது தொழிலாளர் சந்தையின் வலிமையை மதிப்பிடுவதில் ஃபெடரல் ரிசர்வின் வரம்பு எண்ணிக்கையாகும். கூடுதலாக, ஆரம்ப வேலையின்மை கோரிக்கைகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 228,000 அதிகரித்துள்ளது.

    செப்டம்பர் 1 வெள்ளி அன்று வெளியிடப்பட்ட தரவு, சந்தை முன்கணிப்புகளை மேலும் குழப்பியது. வியாழன் அன்று, அனைத்து அறிகுறிகளும் வேலையின்மை அதிகரிப்பை சுட்டிக்காட்டின. இருப்பினும், 170K எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, பண்ணை அல்லாத துறையில் (NFP) உருவாக்கப்பட்ட புதிய வேலைகளின் எண்ணிக்கை கணிசமாக 157K இலிருந்து 187K ஆக உயர்ந்துள்ளது. வேறுவிதமாக கூறினால், இது நல்ல செய்தி. மறுபுறம், வேலையின்மை விகிதமும் 3.5% இலிருந்து 3.8% ஆக அதிகரித்தது (3.5% முன்கணிப்புடன்). எனவே, இது நல்ல செய்தி அல்ல. கூடுதலாக, யு.எஸ். உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீட்டு எண் (PMI) முந்தைய நிலை 46.4 மற்றும் 47.0 என்ற எதிர்பார்ப்புகளில் இருந்து 47.6 ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் ஒருமுறை, இது நல்ல செய்தி. இருப்பினும், 50.0க்கு மேல் உள்ள பிஎம்ஐ பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது, அதே நேரத்தில் 50.0க்கு கீழே சரிவைக் குறிக்கிறது. எனவே, மீண்டும் இது நல்ல செய்தி இல்லையா?

    ஒட்டுமொத்தத்தில், இந்த கலவையான குறிகாட்டிகள் மாறுபட்ட சந்தை எதிர்வினைக்கு வழிவகுத்தன. ஒருபுறம், அமெரிக்க டாலர் குறியீடு (டிஎக்ஸ்ஒய்) ஆகஸ்டு 30 புதன்கிழமை முதல் அதன் நிலையை படிப்படியாக மேம்படுத்தத் தொடங்கியது, வெள்ளிக்கிழமை அதன் ஆதாயங்களை திடீரென்று துரிதப்படுத்தியது. மறுபுறம், செப்டம்பர் 19-20 தேதிகளில் வரவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்பு 12% ஆகக் குறைந்தது. ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகளின் சற்றே மாறுபட்ட அறிக்கைகள் குறைக்கப்பட்ட விகித உயர்வு எதிர்பார்ப்புகளுக்கு பங்களித்தன. ஜாக்சன் ஹோலில் நடந்த உலகளாவிய மத்திய வங்கிகள் கருத்தரங்கில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் பாஸ்டன் தலைவர் சூசன் காலின்ஸ், ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பேட்ரிக் ஹார்கர், பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் ஆகியோர் கூறியதை எங்கள் முந்தைய மதிப்பாய்வில் நாங்கள் ஏற்கனவே தெரிவித்து உள்ளோம். இப்போது, அட்லாண்டாவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ரஃபேல் போஸ்டிக், விகிதங்கள் ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்ட மட்டத்தில் இருப்பதாகவும், மேலும் உயர்வுகள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் கூடுதல் வலியை ஏற்படுத்தக்கூடும் என்றும் நம்புகிறார்.

    யூரோமண்டலப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, சமீபத்திய புள்ளிவிவரங்கள் பணவீக்கம் குறைவது முடிவுற்றதாகக் குறிப்பிடுகின்றன, அதே நேரத்தில் கடன் அளவுகள் வீழ்ச்சி அடைந்ததால் பண விநியோகம் சுருங்கியது. புளூம்பெர்க் நிபுணர்களின் 5.1% முன்கணிப்புக்கு மாறாக, சென்ற ஆண்டுக்கு இந்த ஆண்டு நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) 5.3%-இல் நிலையானதாக இருந்தது. பிராந்தியத்தின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனியில், மாதாந்திர சிபிஐ 0.3% ஆக நிலையானதாக இருந்தது.

    அத்தகைய சூழ்நிலையில், ஐரோப்பிய மத்திய வங்கி (ஈசிபி) தொடர்ந்து பணவியல் கொள்கையை கடுமையாக்கும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், விலைவாசி உயர்வைக் காட்டிலும், தேக்கப் பணவீக்கத்தின் அச்சுறுத்தல் கட்டுப்பாட்டாளரைக் கவலையடையச் செய்வதாகத் தோன்றுகிறது. ஈசிபி நிர்வாகக் குழு உறுப்பினர் இசபெல் ஷ்னாபெல் போன்ற ஒரு ஆக்ரோஷமான நபர் கூட, யூரோமண்டலத்துக்கான பொருளாதாரக் கண்ணோட்டம் ஆரம்பத்தில் நினைத்ததை விட மிகவும் மோசமாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தினார், இது இப்பகுதி ஒரு ஆழமான அல்லது நீடித்த மந்தநிலையின் விளிம்பில் இருக்கக்கூடும் என்று பரிந்துரைத்தது.

    அவரது கருத்துக்கள் தொழிலாளர் சந்தையின் நிலையால் ஆதரிக்கப்படுகின்றன. யூரோமண்டலத்தில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது, 6.4% என்ற அளவில் நிலையாக உள்ளது. ஜெர்மனியில், காலாண்டு அடிப்படையில் இந்த விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது, மெதுவாக கோவிட்-19 தொற்றுநோய்களின் போது காணப்பட்ட நிலைக்குத் திரும்புகிறது.

    ஃபெடரல் ரிசர்வ் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய இரு கட்டுப்பாட்டாளர்களும், மேலும் பணவியல் இறுக்கத்திற்கான ஆர்வத்தை இழந்து வருவதாகத் தெரிகிறது, மேலும் பணக் கட்டுப்பாட்டின் சுழற்சியை (அல்லது குறைந்தபட்சம் விகித உயர்வை நிறுத்திவைக்க) தயாராக உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், பலவீனமான பொருளாதாரங்கள் இழக்க நேரிடும் என்பது தர்க்கரீதியானது. ஜேபி மோர்கன், பேங்க் ஆஃப் அமெரிக்கா ஆகியவற்றின் உத்திசார் நிபுணர்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் யூரோ $1.0500-ஐ எட்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், அதே நேரத்தில் பிஎன்பி பேரிபாஸ் $1.0200 என்ற குறைந்த அளவைக் கணித்துள்ளது.

    ஐந்து நாள் வர்த்தக காலத்தை 1.0794-இல் தொடங்கி, யூரோ/யுஎஸ்டி தொடங்கிய இடத்திலிருந்து கிட்டத்தட்ட 1.0774-இல் நிலைபெற்றது. செப்டம்பர் 1ஆம் தேதி மாலை இந்த மதிப்பாய்வை எழுதும் நேரத்தில், 50% வல்லுநர்கள் இந்த ஜோடியின் ஏறுமுகப் போக்கிற்கு ஆதரவாக உள்ளனர், 20% பேர் இறங்குமுகப் போக்கிற்கு ஆதரவாகவும், 30% பேர் நடுநிலையான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளனர். தொழில்நுட்ப பகுப்பாய்பைப் பொறுத்த வரையில், கடந்த வாரத்தில் எதுவும் மாறவில்லை. டி1 காலக்கெடுவில் உள்ள அனைத்து போக்கு குறிகாட்டிகளும் ஆஸிலேட்டர்களும் அமெரிக்க கரன்சிக்கு ஆதரவாக 100% மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளன. கூடுதலாக, 15% இன்னும் ஜோடி அதிகமாக விற்கப்பட்டதைக் குறிக்கிறது. இந்த ஜோடிக்கு அருகில் உள்ள ஆதரவு நிலைகள் 1.0765, அதைத் தொடர்ந்து 1.0665-1.0680, 1.0620-1.0635, மற்றும் 1.0515-1.0525. காளைகள் 1.0800-இலும்,  அதைத் தொடர்ந்து 1.0835-1.0865, 1.0895-1.0925, 1.0985, 1.1045, 1.1090-1.1110, 1.1150-1.1170, 1.1230, மற்றும் 1.1275-1.1290 ஆகியவற்றில் எதிர்ப்பைச் சந்திக்கும்.

    வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய நிகழ்வுகளில், செப்டம்பர் 4, திங்கட்கிழமை ஈசிபி தலைவர் கிறிஸ்டின் லகார்டே ஆற்றிய உரையில் கவனம் செலுத்தப்பட வேண்டும். செப்டம்பர் 6, புதன் அன்று யூரோமண்டலத்திற்கான சில்லறை விற்பனைத் தரவுகள், யுஎஸ் சேவைகளுடன் வெளியிடப்படும். பிஎம்ஐ புள்ளிவிவரங்கள். செப்டம்பர் 7, வியாழன் அன்று, யூரோமண்டலத்திற்கான திருத்தப்பட்ட 2வது காலாண்டு ஜிடிபி  புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும், வழக்கமான யுஎஸ் ஆரம்ப வேலையின்மை கோரிக்கை எண்ணிக்கை வெளியிடப்படும். மேலும், இந்த வார வேலை நாட்களை நிறைவு செய்து, செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை அன்று, ஐரோப்பிய பொருளாதாரத்தின் முக்கிய இயந்திரமான ஜெர்மனியில் பணவீக்க நிலை (சிபிஐ) பற்றி அறிந்து கொள்வோம்.  

ஜிபிபி/யுஎஸ்டி: எல்லாவற்றிற்கும் மேலாக விகிதம் அதிகரிக்காதா?

  • முன்னதாக ஜிபிபி/யுஎஸ்டி கண்ணோட்டத்தில், மத்திய வங்கிகளின் முக்கியக் கேள்வியை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம்: அதைவிட முக்கியமானது என்ன - பணவீக்கத்தைத் தோற்கடிப்பது அல்லது பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்வதைத் தடுப்பது? யுனைடெட் கிங்டமில் ஆண்டு பணவீக்க விகிதம் 7.9% இலிருந்து 6.8% ஆகக் குறைந்து இருந்தாலும் (2022 பிப்ரவரிக்குப் பிறகு மிகக் குறைவானது), பணவீக்கம் ஜி7 நாடுகளில் மிக அதிகமாக உள்ளது. மேலும், முக்கிய சிபிஐ குறிகாட்டி ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததைப் போலவே, 6.9% சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டும் இருந்தது. இது இரண்டு மாதங்களுக்கு முன்பு நிர்ணயித்த உச்சத்தை விட 0.2% குறைவாகும். கூடுதலாக, அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் புதிய பணவீக்க ஏற்றங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

    இத்தகைய தரவு மற்றும் கண்ணோட்டங்கள், பல ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பேங்க் ஆஃப் இங்கிலாந்தை (பிஓஇ) தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்துவதை கட்டாயப்படுத்தி இருக்கவேண்டும். இருப்பினும், அளவுகளை எதிர் திசையில் சாய்க்கும் மற்றொரு காரணி உள்ளது. ஆகஸ்டு மாதம் இங்கிலாந்தின் உற்பத்தித் துறையின் வீழ்ச்சியை மேலும் ஆழமாக்கியது. அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், வாழ்க்கைச் செலவு நெருக்கடி, ஏற்றுமதித் துறை இழப்புகள், சந்தைக் கண்ணோட்டக் கவலைகள் போன்றவற்றால் தேவை பாதிக்கப்படுவதால், நாட்டில் உள்ள உற்பத்தியாளர்கள் பலவீனமான பொருளாதாரப் பின்னணி குறித்து புகாரளித்தனர். எஸ்&பி குளோபலின் கூற்றுப்படி, இடைநிலை பொருட்கள் உற்பத்தியாளர்கள் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் - பி2பி துறையானது உற்பத்தி அளவுகளில் கடுமையான சரிவை எதிர்கொள்கின்றனர். இது புதிய ஆர்டர்கள், பணியாளர் நிலைகள் ஆகிய இரண்டையும் பாதிக்கிறது, அவை மீண்டும் குறைக்கப்படுகின்றன.

    ஆகஸ்டு மாதத்திற்கான இறுதி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (பிஎம்ஐ) வெறும் 43.0 ஆக இருந்தது. 2008-2009 உலகளாவிய நிதி நெருக்கடி, தொற்றுநோய் தொடர்பான முடக்க நடவடிக்கைகள் போன்ற பொருளாதார அழுத்தத்தின் முக்கிய காலகட்டங்களைத் தவிர, உற்பத்தி அளவுகள் மற்றும் புதிய ஆர்டர்கள் அரிதாகவே காணப்பட்ட விகிதங்களில் சுருங்குவதால், முக்கிய பிஎம்ஐ எண்ணிக்கை 39 மாதங்களில் குறைந்தது.

    இந்த கடினமான பின்னணியில், நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் வட்டி விகிதங்களை உயர்த்துவதைக் காட்டிலும் பொருளாதாரத்தின் நிலை குறித்த கவலைகளில் அதிகக் கவனம் செலுத்துவார்கள் என்று ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் தலைமைப் பொருளாதார நிபுணர், ஹுவ் பில், பணவீக்கத்தைப் பற்றி மனநிறைவுக்கு இடமில்லை என்றாலும், மேலும் நீண்டகாலத்திற்கு விகிதத்தை சீராக வைத்திருக்க விரும்புவதாகக் கூறினார். செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கும் பிஓஇ கூட்டத்தில், தற்போதைய விகிதத்தை 5.25% ஆக வைத்திருக்க வாக்களிப்பதாக அவர் அறிவித்தார். அத்தகைய அறிக்கையைத் தொடர்ந்து, முன்னர் விவரிக்கப்பட்ட விதி நடைமுறைக்கு வருகிறது - இரண்டு கட்டுப்பாட்டாளர்களும் மேலும் விகித உயர்வுகளுக்கான விருப்பத்தை இழந்தால், பலவீனமான பொருளாதாரம் இழக்கிறது. யுகே/யுஎஸ் ஜோடியைப் பொறுத்தவரை, முந்தையது பலவீனமான இணைப்பாக மாறிவிடும்.

    ஸ்கோஷியா பேங்கில் உள்ள வல்லுநர்கள் ஜிபிபி/யுஎஸ்டி மேலும் 1.2400 ஆக குறையும் வாய்ப்பை நிராகரிக்கவில்லை என்று நாங்கள் முன்பே குறிப்பிட்டுள்ளோம். நெதர்லாந்தின் மிகப்பெரிய வங்கிக் குழுவான ஐஎன்ஜி-இன் பகுப்பாய்வாளர்கள், டாலர் வலுப்பெறும் பட்சத்தில், இந்த ஜோடி 1.2500 ஆதரவைக் காணலாம் என்று நம்புகின்றனர். சிங்கப்பூரின் யுனைடெட் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள அவர்களது சகாக்கள், "பவுண்ட் 1.2720 என்ற வலுவான எதிர்ப்பு நிலைக்குக் கீழே இருக்கும் வரை, அது 1.2530 ஆகவும், 1.2480 ஆகவும் கூட பலவீனமடையக்கூடும்" என்று எதிர்பார்க்கிறார்கள்.

    இந்த ஜோடி கடந்த வாரம் 1.2585-இல் முடிந்தது. அருகிலுள்ள காலத்தைப் பார்க்கும்போது, 40% வல்லுநர்கள் மேல்நோக்கிய திருத்தத்தை எதிர்பார்க்கிறார்கள், 20% பேர் டாலர் மேலும் வலுவடைவதை எதிர்பார்க்கிறார்கள், மீதமுள்ள 40% பேர் பக்கவாட்டு நகர்வை எதிர்பார்க்கிறார்கள். டி1 காலக்கெடுவில் உள்ள ஆஸிலேட்டர்களில், 90% சிவப்பு நிறத்திலும் 10% பச்சை நிறத்திலும் உள்ளன. போக்கு குறிகாட்டிகளைப் பொறுத்தவரை, சிவப்பு மற்றும் பச்சை இடையேயான விகிதம் 85% முதல் 15% வரை, சிவப்பு நிறத்திற்கு சாதகமாக உள்ளது. இந்த ஜோடி தெற்கு நோக்கி நகர்ந்தால், அது 1.2560-1.2575, 1.2545, 1.2500-1.2510, 1.2435-1.2450, 1.2300-1.2330, 1.2190-1.2210, 1.2085, 1.1960, மற்றும் 1.1800  ஆகியவற்றில் ஆதரவு நிலைகள் மற்றும் மண்டலங்களை சந்திக்கும். மேல்நோக்கி நகர்ந்தால், இந்த ஜோடி 1.2620-1.2635, 1.2690-1.2710, 1.2760, 1.2800-1.2815, 1.2880, 1.2940, 1.2980-1.3000, 1.3050-1.3060, 1.3125-1.3140, மற்றும் 1.3185-1.3210 ஆகியவற்றில் எதிர்ப்பைச் சந்திக்கும்.

    யுனைட்டெட் கிங்டமின் பொருளாதார நிலை தொடர்பான குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைப் பொறுத்தவரை, செப்டம்பர் 7, வியாழன் அன்று திட்டமிடப்பட்ட பணவீக்க அறிக்கை விசாரணைகளில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

யுஎஸ்டி/ஜேபிஒய்: கரன்சி தலையீடுகளுக்காகக் காத்திருக்கிறது

  • பொதுவாக, வாரத்தின் முடிவுகளை மதிப்பாய்வு செய்தால், டாலர் குறியீடு (டிஎக்ஸ்ஒய்) செப்டம்பர் 01 வெள்ளி அன்று யூரோ/யுஎஸ்டி, ஜிபிபி/யுஎஸ்டி, யுஎஸ்டி/ஜேபிஒய் ஆகிய மூன்று ஜோடிகளையும் மீட்டெடுத்தது, கிட்டத்தட்ட அவற்றை திரும்பப் பெறுகிறது என்று கூறலாம். ஏறக்குறைய அவை ஐந்து நாள் காலத்தை தொடங்கிய இடத்திற்கே திரும்புகின்றன. குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கம் இருந்தபோதிலும் இது நிகழ்ந்தது. உதாரணமாக, ஒரு டாலருக்கு 146.40 யென் மார்க்கில் தொடங்கி, ஜப்பானிய கரன்சி 147.36 உச்சத்தை எட்டியது, பின்னர் 144.44 ஆக குறைந்தது, இறுதியாக 146.21 அளவில் இருந்தது.

    ஜப்பானில் தொழில்துறை செயல்பாடுகள் சரிவைச் சந்தித்து வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உற்பத்தித் துறைக்கான கொள்முதல் மேலாளர்களின் குறியீட்டு (பிஎம்ஐ) தரவுகளில் இருந்து இது தெளிவாகத் தெரிகிறது, இது ஒரு மாதத்தில் 49.7 இலிருந்து 49.6 ஆக வீழ்ச்சியடைந்து, தொடர்ந்து மூன்றாவது மாதமாக 50 வரம்புக்குக் கீழே உள்ளது. 50 அளவில் விரிவடைவதை சுருக்கத்தில் இருந்து பிரிக்கிறது. இந்த பின்னணியில், யுஎஸ்டி/ஜேபிஒய் ஒரு ஏறுமுகமான போக்கைப் பராமரிக்கிறது, இருப்பினும் இது ஜப்பானிய அதிகாரிகளின் கரன்சி தலையீடுகளால் பாதிக்கப்படலாம். தாங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். உதாரணமாக, ஜப்பானின் நிதியமைச்சர், சுனைதி சுசுகி, சமீபத்தில் மற்றொரு வாய்மொழி (நிதி அல்லாத) தலையீட்டை நடத்தினார். செப்டம்பர் 01 அன்று, சந்தைகள் கரன்சி மாற்று விகிதங்களை தாங்களாகவே தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார், அதே நேரத்தில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் விரும்பத்தகாதவை என்று வலியுறுத்தினார். கரன்சி நகர்வுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யென் தொடர்பான முதலீட்டாளர்களை இத்தகைய "மந்திரங்கள்" அமைதிப்படுத்துமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. கடந்த நவம்பரில் நடந்ததைப் போன்றே, வாய்மொழியாக அல்லாமல், உறுதியான கரன்சி தலையீடுகள் ஆதாரங்களை வழங்குவதற்குத் தேவைப்படலாம் என்பது நம்பத்தகுந்தது ஆகும்.

    முந்தைய ஜோடிகளைப் போலவே, அருகிலுள்ள காலக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான பகுப்பாய்வாளர்கள் டிஎக்ஸ்ஒய் போதுமான அளவு இலாபம் ஈட்டியுள்ளது என்றும், குறைந்தபட்சம் தற்காலிகமாக தெற்கு நோக்கி திரும்புவதற்கான நேரம் இதுவாக இருக்கலாம் என்றும் நம்புகின்றனர். யுஎஸ்டி/ஜேபிஒய் தொடர்பாக, 80% பகுப்பாய்வாளர்கள் இத்தகைய போக்கு மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மீதமுள்ள 20% மேலும் இந்த ஜோடி வளர்ச்சிக்கான டாலரின் திறனில் தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளனர். டி1 காலக்கெடுவில், அனைத்து 100% போக்கு குறிகாட்டிகளும் பச்சை நிறத்தில் வரையப்பட்டுள்ளன. ஆஸிலேட்டர்களில், 65% இந்த நிலையில் உள்ளன, 10% சிவப்பு நிறத்தில் உள்ளன, மீதமுள்ள 25% நடுநிலை நிலையைப் பெற்றுள்ளன.

    அருகிலுள்ள ஆதரவு நிலை 146.10 வரம்பில் அமைந்துள்ளது, அதைத் தொடர்ந்து 145.50-145.70, 144.90, 144.50, 143.75-144.05, 142.90-143.05, 142.20, 141.40-141.75, 140.60-140.75, 139.85, 138.95-139.05, 138.05-138.30, 137.25-137.50. மிக நெருக்கமான எதிர்ப்பு 146.50-146.60 ஆகவும், அதைத் தொடர்ந்து 146.90, 147.25-147.35, 148.45-148.85, 150.00 ஆகவும், இறுதியாக 2022 அக்டோபர் அதிகபட்சமான 151.90 ஆகவும் இருக்கும்.

    செப்டம்பர் 08, வெள்ளிக்கிழமை, ஜப்பானின் 2023, 2வது காலாண்டுக்கான ஜிடிபி புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும் நாளாக வரும் வாரத்திற்கான பொருளாதார காலண்டரில் கவனிக்கத்தக்க நிலையில் உள்ளது. வரும் வாரத்தில் ஜப்பானிய பொருளாதாரத்தின் நிலை குறித்து வேறு குறிப்பிடத்தக்க புள்ளிவிவர வெளியீடுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை.

கிரிப்டோகரன்சிகள்: ஏன் பிட்காயின் உயர்ந்தது மற்றும் ஏன் மீண்டும் சரிந்தது

  • கடந்த வாரத்தின் தொடக்கம் விதிவிலக்காக மந்தமாக இருந்தது. கிரேஸ்கேல் இல்லாவிட்டால் அதன் தொடர்ச்சி சீரற்றதாக இருந்திருக்கும். தற்போது, கிரேஸ்கேல் கிரிப்டோகரன்சி சொத்துக்களை நிர்வகிக்கும் உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாகும். மேலும் அது இப்போது, யுஎஸ் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கு (எஸ்இசி) எதிரான மேல்முறையீட்டை வென்றுள்ளது. நீதிபதிகள் ஒருமனதாக பிட்காயின் அறக்கட்டளை நிதியை ஒரு ஸ்பாட் இடிஎஃப் ஆக மாற்றுவதற்கான கட்டுப்பாட்டாளரின் மறுப்பை "தன்னிச்சையானது மற்றும் நிலையற்றது" எனக் கருதினர். இச்சட்டப் போராட்டம் ஓராண்டுக்கும் மேலாக நீடித்தது, எதிர்பாராத விதமாக ஆகஸ்டு 29, செவ்வாய்க்கிழமை, நீதிமன்றம் அத்தகைய உறுதியான தீர்ப்பை வழங்கியது. இதன் விளைவாக, மூன்று மணி நேரத்திற்குள், பிட்காயின் $26,060 இலிருந்து $28,122 ஆக உயர்ந்தது, இந்த 7.9% அதிகரிப்பானது, கடந்த 12 மாதங்களில் சிறந்த வளர்ச்சி விகிதத்தை நிரூபிக்கிறது.

    அநேகமாக, இந்த திடீர் ஏற்றமான விளைவு உள்நாட்டினருக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு அதிகம் ஈர்க்கக்கூடியதாக இருந்திருக்கலாம். நீதிமன்றத்தின் தீர்ப்பை யாரோ முன்கூட்டியே அறிந்திருந்தனர். நீதிமன்றத்தின் அறிவிப்புக்கு சற்று முன்பு, இந்த நபர் சுமார் $780 மில்லியன் மதிப்புள்ள 30,000 பிட்காயின்களை பரிமாற்றத்தில் வைத்தார். குறைந்த பணப்புழக்கம் காரணமாக இத்தகைய காயின்களை விலை உச்சத்தில் விற்பது சவாலானது, இதனால் அவற்றின் விற்பனை மதிப்பு குறைகிறது. இதன் விளைவாக, பிடிசி/யுஎஸ்டி-இன் ஆதாயங்கள் படிப்படியாக மறைந்து, ஆகஸ்டு 29 அன்று தொடங்கிய இடத்திற்கே திரும்பியது.

    இருப்பினும், இந்த சரிவு இருந்தபோதிலும், தற்போதைய நீதிமன்றத் தீர்ப்பு சந்தையில் இன்னும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல பகுப்பாய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த கோடையில், ஸ்பாட் பிட்காயின் இடிஎஃப்-கள் மூலம் கிரிப்டோகரன்சி சந்தையில் நுழைய, எட்டு பெரிய நிதி நிறுவனங்கள் ஏற்கனவே எஸ்இசி -யிடம் விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளன என்பதை நினைவுகூர வேண்டும். அவற்றுள் பிளாக்ராக், இன்வெஸ்கோ, ஃபிடிலிட்டி போன்ற உலகளாவிய சொத்து மேலாளர்கள் உள்ளனர். முன்னதாக, எஸ்இசி முன்பு இதே போன்ற அனைத்து விண்ணப்பங்களையும் நிராகரித்தது கவலையை எழுப்பியது. இருப்பினும், கிரேஸ்கேல் வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து இப்போது எல்லாம் மாறிவிட்டது.

    மூத்த புளூம்பெர்க் உத்திசார் நிபுணர், எரிக் பால்சுனாஸ், 2024ஆம் ஆண்டிற்குள் இடிஎஃப் ஒப்புதல்களுக்கு 95% ஆகவும், இந்த ஆண்டு, 2023-இல் இது நடக்கலாம் என்பதற்காக 75% ஆகவும் தனது கணிப்பை ஏற்கனவே உயர்த்தியுள்ளார். பல்வேறு மதிப்பீடுகளின்படி, முதல் ஆறு மாதங்களில் மட்டும் $5 பில்லியன் $10 பில்லியன் வரை நிறுவன முதலீடுகளை இந்தப் புதிய நிதிகள் வரை ஈர்க்கும், சந்தேகத்திற்கு இடமின்றி விலைப்புள்ளிகள் உயரும்.

    ஃபண்ட்ஸ்டார்ட்டின் இணை நிறுவனர் டாம் லீ, ஒரு ஸ்பாட் பிட்காயின் இடிஎஃப் அங்கீகரிக்கப்பட்டால், விலை $185,000 ஆக உயரக்கூடும் என்று நம்புகிறார். மறுபுறம், ஏஆர்கே இன்வெஸ்டின் சிஇஓ கேத்தி வுட், 2030ஆம் ஆண்டளவில் மொத்த கிரிப்டோகரன்சி சந்தை மூலதனம் $25 டிரில்லியன் ஆக உயரும் என்று கணித்துள்ளார், இது 2100%-க்கும் மேல் அதிகரிக்கும். இந்தக் கணிப்புக்குள், ஏஆர்கே இன்வெஸ்டின் அடிப்படை சூழ்நிலையானது இந்த காலகட்டத்தில் பிடிசி-இன் விலை $650,000 ஆக உயரும் என்று கருதுகிறது, அதே சமயம் மிகவும் நம்பிக்கையான சூழ்நிலை அதை விட தோராயமாக இரண்டு மடங்கு அதிகமாகக் கூறுகிறது.

    ஓபன்ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட்ஜிபிடி, அதன் நம்பிக்கையான சூழ்நிலையை முன்மொழிந்துள்ளது. முதன்மை கிரிப்டோகரன்சி 2024-இல் $150,000 ஆகவும், 2028-இல் $500,000 ஆகவும், 2032க்குள் $1 மில்லியனாகவும், 2050க்குள் $5 மில்லியனாகவும் உயரும் என்று பார்க்கிறது. இருப்பினும், சாட்ஜிபிடி சில நிபந்தனைகளை கோடிட்டுக் காட்டியது. கிரிப்டோகரன்சி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், பிட்காயின் ஒரு பிரபலமான மதிப்பின் கடையாக மாறினால், மற்றும் காயின் பல்வேறு நிதி அமைப்புகளில் ஒருங்கிணைக்கப்பட்டால் மட்டுமே இந்த வளர்ச்சி சாத்தியமாகும். இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஏஐ-இன் கணக்கீடுகளின்படி, 2050 வாக்கில், இக்காயினின் மதிப்பு $20,000 முதல் $500,000 வரை இருக்கும்.

    பொதுவாக, பிடிசி-ஐ நீண்டகாலமாக வைத்திருப்பவர்களுக்கு, சமீபத்திய எண்ணிக்கை கூட நம்பிக்கை அளிக்கிறது. கிளாஸ்நோட்-இன் ஆராய்ச்சி இவ்வாறு வெளிப்படுத்துகிறது, இந்த எண்ணிக்கை சமீபத்தில் ஒரு சாதனை உயர்வை எட்டியுள்ளது, இது ஹோட்லிங் கருத்தின் புகழ், சில நம்பிக்கையின் இருப்பு மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு சாத்தியமான எதிர்ப்பைக் குறிக்கிறது.

    மறுபுறம், குறுகியகால ஊக வணிகர்கள் சந்தையில் இருந்து வெளியேறுகிறார்கள். கிரிப்டோகுவான்ட்டின் கூற்றுப்படி, பிட்காயின்களின் வர்த்தக அளவு ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. "சில்லறை முதலீட்டாளர்கள் வெளியேறுவதால், ஒரு இறங்குமுகமான போக்குக்கு மத்தியில் வர்த்தக அளவுகள் குறைந்து வருகின்றன" என்று கிரிப்டோகுவான்ட்டின் ஆராய்ச்சித் தலைவர் ஜூலியோ மோரேனோ விளக்குகிறார். "ஒட்டுமொத்தத்தில், சந்தை மந்தமாகவே உள்ளது" என்று பெர்ன்ஸ்டீனின் பகுப்பாய்வாளர் கௌதம் சுகானி தெரிவிக்கிறார். "இந்தப் போக்கு அவசியமில்லை, ஆனால் பங்கேற்பாளர்கள் இன்னும் வர்த்தகத்தில் ஆர்வம் காட்டவில்லை, ஏனெனில் சந்தை வினையூக்கிகளுக்காகக் காத்திருக்கிறது."

    உலகின் முன்னணி நிதி ஊடகத் தளங்களில் ஒன்றான ரியல் விஷன் குழுமத்தின் சிஇஓ ரவுல் பால், பிடிசியின் 30 நாள் ஏற்ற இறக்கம் 20 புள்ளிகளாகக் குறைந்துள்ளது என்று குறிப்பிட்டார். இருப்பினும், அவரது கூர்நோக்குகளின் அடிப்படையில், வரலாற்று ரீதியாக, இரண்டு முதல் நான்கு மாதங்களுக்குள் இத்தகைய குறைந்த ஏற்ற இறக்கம் முதல் கிரிப்டோகரன்சியில் வலுவான எழுச்சிக்கு வழிவகுத்தது. கிரிடிபிள் கிரிப்டோ என அழைக்கப்படும் பகுப்பாய்வாளரின் கூற்றுப்படி, உண்மையிலேயே சக்திவாய்ந்த எழுச்சிக்கு, காளைகள் முதல் கிரிப்டோகரன்சியின் விலையை $29,000-$30,000 முக்கிய மண்டலத்திற்கு மேலே தள்ள வேண்டும். இப்போதைக்கு, வர்த்தகர்களில் கணிசமான பகுதியினர் பிடிசியில் மிகவும் சாதகமான கொள்முதல் நிலைகளுக்கு குறையும் என்று எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், விலை $30,000-ஐத் தாண்டும்போது, கிரிடிபிள் கிரிப்டோவின் கூற்றுப்படி, ஃபியர் ஆஃப் மிஸ்ஸிங் அவுட் (FOMO) நிகழ்வு செயல்பாட்டுக்கு வரும், விலைப்புள்ளிகளை மேல்நோக்கிச் செலுத்தும்.

    தற்போதைய சூழ்நிலையில் ஃபிளாக்ஷிப் கிரிப்டோகரன்சியின் விலை எந்த அளவிற்கு குறையும்? செப்டம்பர் வரலாற்று ரீதியாக பிட்காயினுக்கு சாதகமாக இல்லை. 2011 முதல் 2022 வரை, பிடிசி இந்த காலகட்டத்தில் சராசரியாக அதன் மதிப்பில் 4.67% இழந்தது.

    பிட்காயின் விலை $14,000 ஆகக் குறையக்கூடும் என்று பகுப்பாய்வாளர் ஜஸ்டின் பென்னட் நம்புகிறார். இந்த நிலை 2018 முதல் 2020 வரை வலுவான ஆதரவாகச் செயல்பட்டது. பென்னட் தனது முன்கணிப்புகளுக்கு ஆதரவாக ஒரு விளக்கப்படத்துடன் விவரிக்கிறார், இது ஃபிளாக்ஷிப் கிரிப்டோ சொத்து சுமார் பத்து மாதங்களாக இருந்த ஏறுவரிசை சேனலில் இருந்து வெளியேறிவிட்டது. பிட்காயின் $29,000-$33,000 வரம்பில் எதிர்ப்பைக் கடக்கத் தவறியது, இது இந்த முறிவுக்கு வழிவகுத்தது. மேலும், உலகளாவிய பொருளாதார மந்தநிலை சரிவை அதிகரிக்கலாம். பென்னட்டின் கூற்றுப்படி, எஸ்&பி 500 பங்கு குறியீடு 2022-இன் 4,750 புள்ளிகளின் சாதனையைப் பிரதிபலிக்க முடியாததால், அது இப்போது அதன் மதிப்பில் கணிசமான சதவீதத்தை இழக்கக்கூடும்.

    இருப்பினும், மேற்கூறிய கண்ணோட்டங்கள் இருந்தபோதிலும், "பை ஆன் டிப்ஸ்" உத்தியில் நீண்டகால முதலீடுகளுக்கு செப்டம்பர் இன்னும் சாதகமானதாக இருக்கும். புளூம்பெர்க்கின் மூத்த பகுப்பாய்வாளர், மைக் மெக்லோன், முதல் கிரிப்டோகரன்சியின் அளவீடுகளை பங்குச் சந்தையுடன் ஒப்பிட்டு, $10,000க்கு குறைந்தாலும் காயினின் நிலைகளை கணிசமாக அசைக்காது என்று முடிவு செய்தார். உதாரணமாக, கடந்த 20 ஆண்டுகளில் 7,000% வருவாயை வழங்கிய கார்ப்பரேட் நிறுவனமான அமேசானின் பங்குகளை நிபுணர் மேற்கோள் காட்டினார். எனினும், பிடிசி இந்த எண்ணிக்கையை 2011இல் இருந்து 26,000% அதிகமாக விஞ்சியுள்ளது. "$10,000 மதிப்பிற்கு திரும்புவது கூட முன்னோடியில்லாத சொத்து செயல்திறனைப் பராமரிக்கும்" என்று மெக்லோன் குறிப்பிடுகிறார். பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் மற்றும் பாரம்பரிய சந்தையின் சிறப்பியல்புகளான பிற கருவிகள் வெளிவருவதால், பிட்காயினின் "முக்கிய நீரோட்ட இடம்பெயர்வு" பாதையும் முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

    ஸ்பாட் பிட்காயின் இடிஎஃப்களின் சாத்தியமான ஒப்புதலுடன், வரவிருக்கும் பாதியாகக் குறைத்தல் நடவடிக்கையும் இக்காயினின் வளர்ச்சியை பாதிக்கலாம். இந்த காரணிகளுக்கு நன்றி, டிரேடிங்ஷாட் பகுப்பாய்வாளர்களின் கூற்றுப்படி, பிடிசி/யுஎஸ்டி இந்த ஆண்டு இறுதிக்குள் $50,000 குறியாக உயரக்கூடும். இருப்பினும், செப்டம்பர் 1, வெள்ளிக்கிழமை மாலை இந்த மதிப்பாய்வை எழுதும்போது, அதன் வர்த்தகம் சுமார் $25,750. ஒட்டுமொத்த கிரிப்டோகரன்சி சந்தை மூலதனம் $1.048 டிரில்லியன் (ஒரு வாரத்திற்கு முன்பு $1.047 டிரில்லியன்) ஆக உள்ளது. கிரிப்டோ ஃபியர் அண்ட் கிரீட் குறியீடு 40 (வாரத்திற்கு முன்பு 39 புள்ளிகள்) என்ற அளவிலேயே பய மண்டலத்தில் உள்ளது.

 

நோர்ட்எஃப்எக்ஸ் (NordFX) பகுப்பாய்வுக் குழு

 

அறிவிப்பு: இந்தத் தகவல்கள் நிதிச் சந்தைகளில் செயல்படுத்துதவற்கான முதலீட்டு பரிந்துரைகளோ அல்லது வழிகாட்டுதல்களோ அல்ல மேலும் வை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட நிதியின் முழுமையான இழப்பை ஏற்படுத்தும்.

திரும்பிச் செல்லவும் திரும்பிச் செல்லவும்
இந்த இணையதளம் குக்கிகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் குக்கீஸ் கொள்கை பற்றிய விவரங்களை அறிக.