யூரோ/யுஎஸ்டி: பணவீக்கம் போக்குகளை இயக்குகிறது
- கடந்த வாரத்தின் தொடக்கத்தில், டாலர் குறியீடு (டிஎக்ஸ்ஒய்) அக்டோபர் 3-இல் ஆரம்பமான அதன் சரிவைத் தொடர்ந்தது, அதே நேரத்தில் உலகளாவிய பங்குச் சந்தைகள் வளர்ச்சியைக் கண்டன. ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகளின் குறைந்த விகிதத்திற்கான நிலைப்பாடு மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மீதான வருவாய் வீழ்ச்சி ஆகியவை உந்து காரணிகளாக இருந்தன. சமீபத்திய நாட்களில், கட்டுப்பாட்டாளர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு "படிப்படியான கடினமற்ற மந்தநிலைக்கான" சாத்தியக்கூறுகள் குறித்து சந்தையை தீவிரமாக வற்புறுத்தி வருகின்றனர், இது பணவியல் இறுக்கத்தின் சுழற்சியில் ஒரு நீண்ட இடைநிறுத்தத்தை பரிந்துரைக்கின்றனர். உதாரணமாக, அக்டோபர் 11 புதன்கிழமை, ஃபெடரல் ரிசர்வ் ஆளுநர்கள் குழுவின் உறுப்பினர் கிறிஸ்டோபர் வாலர், "நிதிச் சந்தைகளில் இறுக்கம் எங்களுக்காக சில வேலைகளைச் செய்கிறது" என்று கூறினார், இது காத்திருந்து பார்க்கும் அணுகுமுறையை பராமரிக்க மத்திய வங்கியை அனுமதிக்கிறது.
அதே நாளில், ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் (எஃப்ஓஎம்சி) செப்டம்பர் கூட்டத்தின் குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஆவணம், குறைந்த வட்டி விகிதமாக இல்லாவிட்டால், நிச்சயமாக அதிக வட்டி விகிதமாக இருக்காது. செப்டம்பரில் கமிட்டி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்கால வாய்ப்புகளைப் பொறுத்தவரை, ஃபெட் தலைவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து "உயர் நிச்சயமற்ற தன்மையை" ஒப்புக்கொள்கிறார்கள், மேலும் பணவியல் கொள்கையில் எச்சரிக்கையான அணுகுமுறையைப் பேண வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பதாக அக்கூட்டத்தின் குறிப்புகள் சுட்டிக்காட்டின.
அமெரிக்க உற்பத்தியாளர் விலைக் குறியீடு (பிபிஐ) வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சந்தை ஒருமித்த கருத்து படிப்படியாக மாறத் தொடங்கியது. பிபிஐ செப்டம்பர் மாதத்தில் 0.3% முன்கணிப்பை விட 0.5% உயர்ந்ததாக தொழிலாளர் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்பார்க்கப்படும் 0.2% உடன் ஒப்பிடும்போது, முக்கிய பிபிஐ (எம்ஓஎம்) 0.3% அதிகரித்துள்ளது. ஆண்டு அடிப்படையில், இது 2.2%-ஐ எட்டியது, இது 1.6% முன்கணிப்பு மற்றும் 2% முந்தைய எண்ணிக்கையை விஞ்சியது. தொழில்துறை பணவீக்கத்தின் இந்த எதிர்பாராத எழுச்சியானது நுகர்வோர் பணவீக்கமும் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருக்கலாம் என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது.
இது உண்மையில் நிறைவேறியது. அக்டோபர் 12 வியாழன் அன்று வெளியிடப்பட்ட தரவு, செப்டம்பரில் பணவீக்கம் 0.3% முன்கணிப்பை விட 0.4% அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆண்டு அடிப்படையில், நுகர்வோர் விலைக் குறியீடும் (சிபிஐ) எதிர்பார்ப்புகளை மீறி, 3.6% என்ற முன்கணிப்பிற்கு எதிராக 3.7% ஆக உள்ளது. சந்தைப் பங்கேற்பாளர்கள், அத்தகைய பணவீக்க வளர்ச்சியானது, ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகளை ஒரு குறைந்த விகித நிலைப்பாட்டிலிருந்து ஒரு உயர் விகித நிலைப்பாட்டிற்கு மாற்றத் தூண்டும், வரும் எஃப்ஓஎம்சி கூட்டத்தில் வட்டி விகிதத்தை மேலும் 25 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) 5.75% ஆக உயர்த்தக்கூடும் என்று முடிவு செய்தனர். இத்தகைய ஒருமித்த கருத்துக்கு மத்தியில், அமெரிக்க அரசாங்கப் பத்திரங்களின் வருவாயுடன் டாலரும் படிப்படியாக அதிகரித்தது, அதே சமயம் பங்குச் சந்தைகள் சரிந்தன. டிஎக்ஸ்ஒய் ஒரு புதிய உள்ளூர் உச்சத்தை அடைந்தது, அது 106.35-ஐ எட்டியது. 10 ஆண்டு கருவூலங்களின் வருவாய் 4.65% ஆகவும், 2 ஆண்டு வருவாய் 5.05% ஆகவும் உயர்ந்தது. யூரோ/யுஎஸ்டி தலைகீழ் போக்கு, சில மணிநேரங்களில் அதிகபட்சமாக 1.0639 இலிருந்து 1.0525 ஆகக் குறைந்தது.
ஜெர்மனியின் சிபிஐ ஆனது செப்டம்பர் 11 புதன் அன்று வெளியிடப்பட்டது, இது ஆண்டு நுகர்வோர் பணவீக்கம் 4.3% மற்றும் மாதாந்திர எண்ணிக்கை 0.3% ஆகியவற்றைக் காட்டுகிறது, இவை இரண்டும் முன்கணிப்புகள், முந்தைய தரவுகள் ஆகியவற்றுடன் முழுமையாக ஒத்துப்போகின்றன. ஜெர்மனியில் பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது என்று ஈசிபி-இன் ஆளும் குழுவின் உறுப்பினரும் புன்டஸ்பேங்க்கின் தலைவருமான ஜோகிம் நாகல் கூறினார். 2025ஆம் ஆண்டில், பணவியல் கொள்கையின் இறுக்கம் யூரோமண்டலத்தில் பணவீக்கத்தை 2.7% ஆகக் குறைக்கும் என்று அவர் கணித்துள்ளார். "அதிக பணவீக்க விகிதங்களை நாங்கள் தோற்கடிக்கும் வரை, நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம்," என்று அவர் உறுதியளித்தார்.
ஈசிபி-இன் செப்டம்பர் கூட்டத்தின் குறிப்புகள், ஆளும் குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் யூரோவிற்கான 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகித உயர்வை ஆதரித்ததை வெளிப்படுத்தியது. அவர்களின் பார்வையில், எந்தவொரு இடைநிறுத்தமும் இறுக்கமான சுழற்சி முடிவுக்கு வந்துவிட்டது அல்லது அதிகப்படியான பணவீக்கத்தை விட பொருளாதாரத்தின் நிலை, சாத்தியமான மந்தநிலை ஆகியவை குறித்து ஆளும் குழு அதிக அக்கறை கொண்டுள்ளது. இந்த குறிப்புகள் அக்டோபர் 12 வியாழன் அன்று வெளியிடப்பட்டன.
அக்குழுவின் சில உறுப்பினர்கள் முக்கிய விகிதங்களை அவற்றின் தற்போதைய நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர், குறிப்பாக பேங்க் ஆஃப் பிரான்ஸ் தலைவர் பிரான்சுவா வில்லேராய் டி கல்ஹவ். அவரது கருத்துப்படி, பணவியல் கொள்கையில் பொறுமை தற்போது செயல்பாட்டை விட அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, "கடினமான ஒன்றை" விட "படிப்படியான கடினமற்ற மந்தநிலை" மூலம் இலக்கை அடைவது மிகவும் சிறந்தது என்று கூறினார்.
அதிக அளவு நிகழ்தகவுடன், ஈரோப்பியன் சென்ட்ரல் பேங்க் அக்டோபர் 26 அன்று அதன் அடுத்த கூட்டத்தில் வட்டி விகிதத்தை 4.75% ஆக உயர்த்தும். இந்த அதிகரிப்புக்குப் பிறகும், வட்டி விகிதம் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை விடக் குறைவாகவே இருக்கும். யூரோமண்டலப் பொருளாதாரத்தின் வெளிப்படையான பலவீனத்துடன் இணைந்து, இது யூரோ மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தும். குளிர்காலம் நெருங்கி வரும் இந்நேரத்தில், உக்ரைனில் நடந்து வரும் இராணுவ நடவடிக்கைகள், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களின் சமீபத்திய அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக எரிபொருள் விலைகளில் சாத்தியமான அதிகரிப்பால் நிலைமை மேலும் சிக்கலாகிறது.
யூரோ/யுஎஸ்டி கடந்த வாரம் 1.0507 என்ற அளவில் மூடப்பட்டது. அக்டோபர் 13 அன்று மாலை வரை, இந்த மதிப்பாய்வு எழுதப்பட்டபோது, வல்லுநர்கள் அதன் நெருங்கிய கால வாய்ப்புகள் குறித்த கருத்தில் பிரிந்த கணிப்பைக் கொண்டிருந்தனர்: 80% பேர் இந்த ஜோடிக்கு வடக்கு நோக்கி திருத்தம் செய்ய விரும்பினர், 20% பேர் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தனர். மேலும் டாலரை வலுப்படுத்துவதற்கு ஆதரவான வாக்குகளின் எண்ணிக்கை 0% ஆக இருந்தது.
தொழில்நுட்பப் பகுப்பாய்வைப் பொறுத்தவரை, டி1 அட்டவணையில் உள்ள போக்கு குறிகாட்டிகளில், 100% கரடிகளுக்கு பக்கபலமாக உள்ளது. பெரும்பான்மையான (60%) ஆஸிலேட்டர்கள் தொடர்ந்து சிவப்பு நிறத்தில் யு.எஸ். கரன்சிக்கு ஆதரவாக உள்ளன. 30% யூரோவின் பக்கமும், மீதமுள்ள 10% நடுநிலை நிலைப்பாட்டிலும் உள்ளன.
இந்த ஜோடிக்கு நெருங்கிய கால ஆதரவு 1.0450 ஆகும், அதைத் தொடர்ந்து 1.0375, 1.0255, 1.0130 மற்றும் 1.0000 ஆக உள்ளது. காளைகள் 1.0600-1.0620, பின்னர் 1.0670-1.0700, 1.0740-1.0770, 1.0800, 1.0865 மற்றும் 1.0895-1.0930 பகுதியில் எதிர்ப்பைச் சந்திக்கும்.
வரும் வாரத்தின் பொருளாதார காலண்டர் பல முக்கிய நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறது. அக்டோபர் 17 செவ்வாய் அன்று, யு.எஸ்.-இன் சில்லறை விற்பனைத் தரவு வெளியிடப்படும். யூரோமண்டலத்தின் நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) புதன்கிழமை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் 19 வியாழன் அன்று, பிலடெல்பியா ஃபெட் உற்பத்தி குறியீட்டு வெளியீடு, அமெரிக்காவில் ஆரம்ப வேலையின்மை கோரிக்கைகள் பற்றிய வழக்கமான தரவு ஆகியவை இடம்பெறும். வியாழன் அன்று மாலையில் ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலின் உரையும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜிபிபி/யுஎஸ்டி: இது கடினமாக இருந்தது, மேலும் இது கடினமாக இருக்கும்
- ஒட்டுமொத்தமாக, ஜிபிபி/யுஎஸ்டி விளக்கப்படம் யூரோ/யுஎஸ்டி-ஐ ஒத்திருந்தது: வியாழன் வரை உயர்ந்தும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் நுகர்வோர் பணவீக்கத் தரவு வெளியிடப்பட்ட பிறகு தலைகீழ் மற்றும் சரிந்தும் காணப்பட்டது. மேலும் இறுக்கமான யு.எஸ். கரன்சி கொள்கை, இங்கிலாந்து தொழில்துறை உற்பத்தி தரவுகளில் இலிருந்து பிரிட்டிஷ் பவுண்டு கூடுதல் அழுத்தத்தை எதிர்கொண்டது.
வியாழன் அன்று வெளியிடப்பட்ட தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் (ஓஎன்எஸ்) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்டு மாதத்தில் நாட்டின் தொழில்துறை செயல்பாடு மீண்டும் சரிந்துள்ளது. ஜூலை மாதத்தில் -0.4% மற்றும் -1.2% சரிவு என்ற முன்கணிப்புடன் ஒப்பிடுகையில், உற்பத்தி வெளியீடு -0.8% குறைந்துள்ளது. ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி முந்தைய மாதத்தில் எதிர்பார்த்த -0.2% மற்றும் -1.1%க்கு எதிராக -0.7% குறைந்துள்ளது. ஆண்டு அடிப்படையில், ஆகஸ்டு மாதத்தில் உற்பத்தி வெளியீடு 2.8% அதிகரித்தாலும், எதிர்பார்க்கப்பட்ட 3.4%-ஐ விட குறைந்துவிட்டது. தொழில்துறை உற்பத்தியின் ஒட்டுமொத்த அளவும் எதிர்பார்ப்புகளும் தவறாகியது, எதிர்பார்க்கப்பட்ட 1.7%க்கு பதிலாக 1.3% மட்டுமே அதிகரித்தது.
இங்கிலாந்தின் ஜிடிபி, ஜூலையில் -0.6% ஆகச் சுருங்கி, ஆகஸ்டில் 0.2% அதிகரித்த போதிலும், பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியின் அபாயங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு பெரும்பாலும் இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் காரணமாகும்–மத்தியக்கிழக்கில் அதிகரிக்கும் பதட்டங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கக் கூடும், மேலும் இயற்கை எரிசக்தி வளங்களுக்கான விலை உயர்வு, முதன்மையாக எண்ணெய், பணவீக்க அழுத்தங்களை அதிகரிக்கும்.
மேலும், பலவீனமான தேவை காரணமாக பிரிட்டிஷ் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை குறைத்தது மட்டுமின்றி, கடன்களுக்கான அதிக வட்டி விகிதங்கள் காரணமாக திறன் விரிவாக்கத்திற்கான திட்டங்களையும் ஒத்திவைத்துள்ளன.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கும் பொருளாதாரம் ஆழ்ந்த மந்தநிலைக்குச் செல்வதைத் தடுப்பதற்கும் இடையில் சிக்கிக்கொண்டிருக்கும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து (பிஓஇ) அதிகாரிகளுக்கு இந்தச் சூழ்நிலை ஒரு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அக்டோபர் 13 வெள்ளி அன்று மொராக்கோவில் நடந்த இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸின் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய பிஓஇ ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி "கடந்த முடிவு கடினமான ஒன்று" என்றும் "எதிர்கால முடிவுகளும் கடினமாக இருக்கும்" என்றும் கூறினார். செப்டம்பரில் வட்டி விகிதம் 5.25% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த பிஓஇ கூட்டம் நவம்பர் 2ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் கட்டுப்பாட்டாளர் விகிதத்தை சில அடிப்படை புள்ளிகளால் கூட உயர்த்த விரும்புவாரா என்பது ஒரு முக்கியக் கேள்வியாகவே உள்ளது.
ஜிபிபி/யுஎஸ்டி கடந்த வாரம் 1.2143 என்ற அளவில் முடிந்தது. அதன் அண்மைக்கால எதிர்காலம் குறித்த பகுப்பாய்வாளர்களின் கருத்துக்கள் வியக்கத்தக்க வகையில் ஒருமனதாக இருந்தன, 100% இந்த ஜோடிக்கான அதிகரிப்பை முன்கணித்துள்ளனர். (அத்தகைய ஒருமித்த கருத்து கூட முன்கணிப்பின் துல்லியம் குறித்து எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது என்பதை நினைவூட்டுவது பொருத்தமானது). மாறாக, டி1 அட்டவணையில் உள்ள போக்கு குறிகாட்டிகள் முற்றிலும் இறங்குமுக போக்கில் உள்ளன: அவற்றில் 100% சரிவை சுட்டிக்காட்டுகின்றன மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளன. ஆஸிலேட்டர்கள் ஜோடிக்கு 50% வீழ்ச்சியைக் குறிக்கிறது, 40% அதிகரிப்பையும், மீதமுள்ள 10% நடுநிலை நிலைப்பாட்டையும் பராமரிக்கிறது. இந்த ஜோடி கீழ்நோக்கிச் சென்றால், அது 1.2100-1.2115, 1.2030-1.2050, 1.1960 மற்றும் 1.1800-இல் ஆதரவு நிலைகளையும் மண்டலங்களையும் சந்திக்கும். இந்த ஜோடி உயர்ந்தால், அது 1.2205-1.2220, 1.2270, 1.2330, 1.2450, 1.2510, 1.2550-1.2575, 1.2690-1.2710, 1.2760, மற்றும் 1.2800-1.2815 ஆகிய நிலைகளில் எதிர்ப்பையும் சந்திக்கும்.
வரும் வாரத்திற்கான குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில், அக்டோபர் 17 செவ்வாய்க்கிழமை அன்று இங்கிலாந்து தொழிலாளர் சந்தையின் நிலை குறித்த தரவு வெளியிடப்படுவதும் அடங்கும். அக்டோபர் 18 புதன்கிழமை அன்று, யூரோ மண்டலம், இங்கிலாந்து ஆகிய இரண்டிற்கும் நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) தரவு வெளியிடப்படும். (இந்த நாளில் யூரோ/ஜிபிபிக்கு குறிப்பாக அதிக ஏற்ற இறக்கத்தை எதிர்பார்க்கலாம்). ஆர்வமாக எதிர்பார்க்கப்படுவது என்னவெனில், அக்டோபர் 20 வெள்ளிக்கிழமை இங்கிலாந்திற்கான சில்லறை விற்பனைத் தரவுகள் கிடைக்கப்பெறும்.
யுஎஸ்டி/ஜேபிஒய்: முழு வட்டம் வருகிறது
- ஜப்பானில் என்ன நடக்கிறது? சரி, நிலைமை பெரும்பாலும் வழக்கம் போல் உள்ளது. அக்டோபர் 3 அன்று 147.24 என்ற நிலைக்குச் சரிந்த பிறகு, யுஎஸ்டி/ஜேபிஒய் அதன் மேல்நோக்கிய பாதையை மீண்டும் தொடங்கியது, வாரத்தின் அதிகபட்சமான 149.82, முக்கிய 150.00 அளவைக் காட்டிலும் இறங்குமுகமாக இருந்தது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், பேங்க் ஆஃப் ஜப்பான் (பிஓஜே) ஆகியவற்றுக்கு இடையேயான பணவியல் கொள்கைகளில் உள்ள வேறுபாடு தொடர்ந்து இந்த ஜோடியை மேல்நோக்கி தள்ளும் என்று பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானிய நிதி அதிகாரிகளின் எந்தவொரு கரன்சி தலையீடும் யென் மதிப்பை தற்காலிகமாக வலுவடையச் செய்யும்.
பேங்க் ஆஃப் ஜப்பானின் கூற்றுப்படி, உற்பத்தியாளர் பணவீக்கம் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக குறைந்துள்ளது. செப்டம்பர் 2.3% கணிப்புடன் ஆகஸ்டு மாதத்தில் 3.3% உயர்ந்த உற்பத்தியாளர் விலைகள், உண்மையில் சென்றை ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைந்தபட்சம் 2.0% அதிகரித்துள்ளது, இது 2021 மார்ச்சுக்குப் பிறகு மிகக் குறைவு. இருப்பினும், நுகர்வோர் பணவீக்கத்தைப் பொறுத்தவரை, 2023/24 நிதியாண்டிற்கான முக்கிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (சிபிஐ) இலக்கு 2.5% முதல் சுமார் 3% வரை பிஓஜே உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. அக்டோபர் 10 செவ்வாய்க்கிழமை, கியோடோ செய்தி நிறுவனத்தால், தகவலறிந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி இது தெரிவிக்கப்பட்டது.
ஜப்பானின் பொருளாதார நிலை மற்றும் அதன் பணவியல் கொள்கையை மதிப்பிடும் எஸ்&பி குளோபல் தரமதிப்பீடு ஏஜென்சி, "ஜப்பானில் வட்டி விகிதங்கள் 2024 முதல் உயரத் தொடங்கும்" என்று நம்புகிறது. இருப்பினும், ஏஜென்சியின் பார்வை பேங்க் ஆஃப் ஜப்பான் (பிஓஜே) அதிகாரிகளின் அறிக்கைகளுக்கு முரணானது. உதாரணமாக, பிஓஜே குழு உறுப்பினர் அசாஹி நோகுச்சி, அக்டோபர் 13 வியாழன் அன்று, "இலக்கு பணவீக்க விகிதமான 2%-ஐ அடைவதன் மூலம் வட்டி விகித உயர்வு தூண்டப்படும்" என்றும், இந்த இலக்கு இன்னும் எட்டப்படாமல் உள்ளது என்றும் கூறினார். அவரைப் பொறுத்தவரை, "அவசரப்பட வேண்டிய அவசியமில்லை" மற்றும் "வருமான வளைவுக் கட்டுப்பாடு (ஒய்சிசி) கொள்கையை அவசரமாக சரிசெய்ய வேண்டிய அவசியம் இல்லை." நோகுச்சியின் அறிக்கைகளில் இருந்து, ஜப்பானிய கட்டுப்பாட்டாளர் வட்டி விகிதங்களின் தலைப்பைக் கூட சிந்திக்கமாட்டார், அவற்றை எதிர்மறையான -0.1% என்ற அளவில் வைத்திருப்பார், அது ஃபெடரல் ரிசர்வின் பணவியல் கொள்கைக்காக இல்லை என்பதை எவர் ஒருவரும் ஊகிக்கலாம். விகித உயர்வுகள் "ஜப்பானில் பணவீக்க எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக அமெரிக்க வட்டி விகிதங்களைப் பிரதிபலிக்கிறது" என்று நோகுச்சி கூறினார்.
யுஎஸ்டி/ஜேபிஒய் 149.53 என்ற அளவில் வர்த்தக வாரத்தை முடித்தது. பெரும்பாலான வல்லுநர்கள் யூரோ மற்றும் பவுண்டுக்கு எதிராக டாலர் பலவீனமடையும் என்று கணித்தாலும், யென் வரும்போது கணக்கெடுக்கப்பட்டவர்களில் 25% பேர் மட்டுமே இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டனர். கணிசமான 75% பேர் யென் மேலும் பலவீனமடையும் என்றும் அமெரிக்க கரன்சி வலுவடையும் என்றும் கணித்துள்ளனர். அனைத்து 100% போக்கு குறிகாட்டிகளும் பச்சை நிறத்தில் உள்ளன. ஆஸிலேட்டர்களில், சற்று குறைவாக, 80% பச்சை நிறத்தில் உள்ளது, 10% சிவப்பு நிறமாக மாறியது, மீதமுள்ள 10% நடுநிலை சாம்பல் நிறத்தில் உள்ளன. அருகிலுள்ள ஆதரவு நிலை 149.15-இல் உள்ளது, அதைத் தொடர்ந்து 148.15-148.40, 146.85-147.25, 145.90-146.10, 145.30, 144.45, 143.75-144.05, 142.20, 140.60-140.75, 138.95-139.05, மற்றும் 137.25-137.50 ஆக உள்ளது. நெருங்கிய எதிர்ப்பு 149.70-150.15 ஆகவும், பின்னர் 150.40, 151.90 (2022 அக்டோபர் அதிகபட்சம்) மற்றும் 153.15 ஆகவும் உள்ளது.
ஜப்பானிய பொருளாதாரத்தின் நிலை தொடர்பான குறிப்பிடத்தக்க பொருளாதார தரவு எதுவும் வரும் வாரத்தில் வெளியிட திட்டமிடப்படவில்லை.
கிரிப்டோகரன்சிகள்: பிட்காயின் அடுத்து எங்கு பறக்கும்?
- கடந்த வாரம், பிட்காயின் அதன் "பெரிய சகோதரர்களிடமிருந்து" தன்னைப் பிரித்து, நேரடி மற்றும் தலைகீழ் தொடர்புகளை புறக்கணித்து, அதன் சொந்த போக்கை பட்டியலிடத் தொடங்கியது. உயரும் பங்கு குறியீடுகள், பலவீனமான டாலர் இருந்தபோதிலும், டாலர் வலிமை பெறத் தொடங்கியபோது முன்னணி கிரிப்டோகரன்சி வீழ்ச்சியடைந்து பக்கவாட்டு போக்குக்கு நகர்ந்தது.
பிடிசி/யுஎஸ்டி மார்ச்சு மாத மத்தியில் இருந்து $24,300-$31,300 வரம்பிற்குள் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த எட்டு வாரங்களில், அதன் மேல் எல்லை மேலும் குறைந்து, $28,100-$28,500 மண்டலமாக நிலைபெற்றது. இந்த வரம்பு குறைந்துவிட்டதால், குறுகியகால ஊக வணிகர்கள், சில்லறை வர்த்தகர்கள் முனைப்பு காட்டாமல் உள்ளனர், இதனால் பெற்ற மூலதனமாக்கல் குறிகாட்டி பூஜ்ஜியத்திற்கு அருகில் உள்ளது. "ஹாட்லர்கள்" என்று அழைக்கப்படும் நீண்டகாலம் வைத்திருப்பவர்கள் (ஹோல்டர்கள்), மாதத்திற்கு சுமார் 50,000 காயின்களை வாங்குவதற்குப் பதிலாக, தங்கள் பிடிசி வாலட்களைச் சேர்த்துக் கொள்கின்றனர்.
வரலாற்று ரீதியாக, இத்தகைய சந்தை தேக்கம் குறிப்பிடத்தக்க விலை நகர்வுகளுக்கு முன்னதாகவே உள்ளது. பல முதலீட்டாளர்கள் இப்போது மற்றொரு காளை நீடித்த அதிகரிப்புக்கான தூண்டுதல்களில் வரவிருக்கும் 2024 பாதியாக்கல் நிகழ்வு, ஸ்பாட் பிட்காயின் இடிஎஃப்களின் சாத்தியமான ஒப்புதல் ஆகியவை அடங்கும் என்று ஊகிக்கிறார்கள். மைக்ரோஸ்ட்ரேடஜி, ஒரு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம், 158,245 பிடிசி-ஐக் குவித்துள்ளது, இது தோராயமாக $4.24 பில்லியன் மதிப்புடையது. கூடுதலாக, முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் ஜூன் மாதம் ஒரு ஸ்பாட் பிட்காயின் இடிஎஃப்க்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து முன்னணி மைனர்களில் $400 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை வாங்கியது.
புல் ரன் (காளை ஓட்டம்) இப்போதே தொடங்கக்கூடிய சாத்தியம்; இருப்பினும், புளூம்பெர்க் உத்திசார் நிபுணர் மைக் மெக்லோன், கடுமையான யு.எஸ். கொள்கைகள், குறிப்பாக செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (எஸ்இசி), பிட்காயினின் வளர்ச்சியைத் தடுக்கும் முக்கியத் தடைகள் ஆகும் என்று நம்புகிறார். சாட்ஜிபிடி சிஇஓ சாம் ஆல்ட்மேனும் அமெரிக்கா மீதான ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொள்கிறார். கிரிப்டோ தொழில் தொடர்பான அரசின் அணுகுமுறை. "கிரிப்டோகரன்ஸிகள் மீதான போர் முடிவு இல்லாததாகத் தோன்றுகிறது, மேலும் அதிகாரிகள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்" என்று ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்முனைவோர் கூறினார். யு.எஸ். ஜனாதிபதி வேட்பாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் உடன், ஆல்ட்மேன், சுதந்திரமான டிஜிட்டல் சொத்துகள் மீதான அரசாங்கத்தின் விரோதப் போக்கானது, அவர்களது சொந்த மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சியை (சிபிடிசி) அறிமுகப்படுத்துவதற்கான அவர்களின் விருப்பத்தின் காரணமாக இருப்பதாகக் கருதுகிறார். இந்த விருப்பம் நிறைவேறினால், அது நாட்டிற்கு அதன் குடிமக்கள் மீது மற்றொரு கண்காணிப்பு கருவியை வழங்கும்.
மெய்நிகர் சொத்துக்கள் மீதான மற்றொரு அழுத்தப் புள்ளி யு.எஸ். ஃபெடரல் ரிசர்வ் பணவியல் கொள்கையில் இருந்து வருகிறது. ஃபெட்டின் நடவடிக்கைகள் காரணமாக பிட்காயின் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறக்கூடும் என்று பகுப்பாய்வாளர் நிக்கோலஸ் மெர்டென் கருத்து தெரிவிக்கிறார், இது அமெரிக்காவில் நீடித்த பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். எண்ணெய், இயற்கை எரிவாயு, யுரேனியம் போன்ற பொருட்களின் விலைகள் நிலையானதாகவோ அல்லது குறையவோ தொடங்கினால், இது வரவிருக்கும் குறுகியகால மந்தநிலையைக் குறிக்கும். அத்தகைய சூழ்நிலையில், 2022 அக்டோபரில் ஏற்பட்ட திருத்தத்தைப் போலவே பங்கு விலைகள் தோராயமாக 33% குறையக்கூடும் என்று மெர்டென் நம்புகிறார். பிட்காயின், பதிலுக்கு $15,000- $17,000 வரம்பிற்குச் சரியும்.
ஃபெடரல் ரிசர்வ் பொருளாதாரத்தில் அதிகப் பணப்புழக்கத்தை செலுத்தத் தொடங்கும் வரை சந்தையில் ஒரு நீடித்த காளை (ஏறுமுகப்) போக்கு சாத்தியமில்லை என்று பகுப்பாய்வாளர் நம்புகிறார். "பண விநியோகம் அதிகரிக்கும்போதும், முதலீட்டாளர்கள் இடர்களை பொறுத்துக்கொள்ளும் போதும் பிட்காயின் செழிக்கிறது. தற்போது, இந்த நிபந்தனைகள் எதுவும் பூர்த்தி செய்யப்படுவதில்லை," என்று நிக்கோலஸ் மெர்டன் விளக்கினார்.
பிட்காயினின் தற்போதைய இயக்கம் 2016 மற்றும் 2020-இல் பாதியாகக் குறைக்கப்பட்டதற்கு முன்னும் பின்னும் காணப்பட்டவற்றுடன் ஒத்துப்போவதாகத் தெரிகிறது. அதன் கோடைக்கால உச்சத்தைத் தொடர்ந்து, இக்காயின் ஒரு கீழ்நோக்கிய திருத்தத்தை எதிர்கொள்கிறது; இருப்பினும், இது ஆச்சரியமல்ல. பொதுவாக, பாதியாகக் குறைப்பதற்கு சுமார் 200 நாட்களுக்கு முன்பு, முன்னணி கிரிப்டோகரன்சி அதன் மதிப்பில் 60-65% வரை இழக்கலாம், ஆனால் அதன் வளர்ச்சிப் பாதையை மீண்டும் தொடங்கும்.
பல வல்லுநர்கள் 2024ஆம் ஆண்டில் பிட்காயின் விலையில் கணிசமான உயர்வைக் கணிக்கின்றனர். முதலீட்டாளர் நம்பிக்கையும் இந்த டிஜிட்டல் தங்கத்தின் தற்போதைய விலைப் போக்கால் தூண்டப்படுகிறது: கோடைக்கால உயர்விலிருந்து பின்வாங்கினாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிட்காயினில் செய்யப்பட்ட முதலீடுகள் 60%க்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன.
ஜேபி மோர்கன் வல்லுநர்கள் 2024-இல் $45,000க்கு விலை உயர்வைக் கணித்துள்ளனர், அதே நேரத்தில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் $100,000-ஐ எட்டும் என்று கணித்துள்ளது. எழுத்தாளரும் முதலீட்டாளருமான ராபர்ட் கியோசாகி, கிரிப்டோகிராஃபர் ஆடம் பேக் ஆகியோரும் $100,000 அளவை இலக்காகக் கொண்டுள்ளனர். ஃபண்ட்ஸ்ட்ராட் ரிசர்ச் நிறுவனர் டாம் லீ பிட்காயினைக்கு $180,000-இல் கற்பனை செய்கிறார், அதே நேரத்தில் துணிகர முதலீட்டாளர் டிம் டிராப்பர் $250,000 மதிப்பீட்டைக் கணிக்கிறார். பில்லியனர் மைக் நோவோக்ராட்ஸ், ஏஆர்கே இன்வெஸ்ட் சிஇஓ கேத்தி உட் ஆகியோர் இக்காயினின் மதிப்பு முறையே $500,000 மற்றும் $1 மில்லியனாக அடுத்த ஆண்டுக்கு உயரும் என்று திட்டமிட்டுள்ளனர்.
முன்னாள் பிட்மெக்ஸ் சிஇஓ ஆர்தர் ஹேய்ஸ் அடுத்த ஆண்டு பிட்காயினுக்கு $70,000 என்ற "சுமாரான" இலக்கை நிர்ணயித்துள்ளார். $750,000 முதல் $1 மில்லியன் வரையிலான வரம்பைப் பொறுத்தவரை, 2026ஆம் ஆண்டளவில் பிடிசி/யுஎஸ்டி மட்டுமே அந்த நிலையை எட்டும் என்று ஹேய்ஸ் நம்புகிறார். சொத்தின் வரையறுக்கப்பட்ட வழங்கல், ஸ்பாட் பிட்காயின் இடிஎஃப் ஒப்புதல்கள், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தனது முன்கணிப்பை நியாயப்படுத்துகிறார். "இது மனித வரலாற்றில் மிகப்பெரிய நிதிச் சந்தைகளின் ஏற்றம் என்று நான் நினைக்கிறேன். பிட்காயின் அதிக நிலைக்கு உயரும், நாஸ்டாக் அதிக நிலைக்கு உயரும், மற்றும் எஸ்&பி 500 அதிக நிலைக்கு உயரும்" என்று ஹேய்ஸ் கூறினார்.
வாரன் பஃபெட்டின் பங்குதாரரும், அமெரிக்க ஹோல்டிங் நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்தவேயின் துணைத் தலைவருமான சார்லி முங்கர், டிஜிட்டல் சொத்துக்களுக்கு மோசமான எதிர்காலத்தை கணித்துள்ளார். அவரது பார்வையில், இந்த சொத்துக்களில் பெரும்பாலான முதலீடுகள் இறுதியில் பயனற்றதாகிவிடும். ஜூம்டோபியா ஆன்லைன் மாநாட்டின்போது 99 வயதான முதலீட்டாளர் இவ்வாறு தெரிவித்தார், "என்னை பிட்காயினில் தொடங்கச் செய்யாதீர்கள். இது நான் பார்த்ததில் மிக மோசமான முதலீடு.”
இந்த மதிப்பாய்வை எழுதும் நேரத்தில், அக்டோபர் 13 வெள்ளிக்கிழமை மாலை, கிரிப்டோ சந்தையின் மொத்த சந்தை மூலதனம் $1.046 டிரில்லியனாக உள்ளது, இது ஒரு வாரத்திற்கு முன்பு இருந்த $1.096 டிரில்லியனை விட குறைவாகும். ஒட்டுமொத்த சந்தையில் பிட்காயினின் பங்கு ஆண்டின் தொடக்கத்தில் 39.18% இலிருந்து 49.92% ஆக அதிகரித்துள்ளது. கிரிப்டோ சந்தை "அதன் மிகக் கடினமான" கட்டங்களில் ஒன்றுக்குள் நுழைகிறது என்று பகுப்பாய்வாளர் பெஞ்சமின் கோவன் நம்புகிறார். இந்நிபுணரின் கூற்றுப்படி, ஆல்ட்காயின் விலை வீழ்ச்சி, இந்த சொத்து வகுப்பில் முதலீட்டாளர் ஆர்வம் குறைவதற்கு மத்தியில் பிட்காயினின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஃபிபோனாச்சி ரிட்ரேஸ்மெண்ட் அளவைப் பயன்படுத்தி, கடந்த சுழற்சியில் செய்தது போல், இந்த ஆதிக்க எண்ணிக்கை 60% ஆக இருக்கும் என்று கோவன் எதிர்பார்க்கிறார், ஆனால் ஸ்டேபிள்காயின் சந்தையின் காரணமாக 65% அல்லது 70% ஆக உயராது. பிடிசி/யுஎஸ்டி அக்டோபர் 13 அன்று $27,075-இல் முடிந்தது. பிட்காயினுக்கான கிரிப்டோ ஃபியர் & கிரீட் குறியீடு வாரத்தில் 50 முதல் 44 புள்ளிகளாகக் குறைந்துள்ளது, இது நடுநிலை மண்டலத்திலிருந்து மீண்டும் பயம் மண்டலத்திற்கு நகர்கிறது.
நோர்ட்எஃப்எக்ஸ் பகுப்பாய்வுக் குழு
அறிவிப்பு: இந்தத் தகவல்கள் நிதிச் சந்தைகளில் செயல்படுத்துதவற்கான முதலீட்டு பரிந்துரைகளோ அல்லது வழிகாட்டுதல்களோ அல்ல மேலும் இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட நிதியின் முழுமையான இழப்பை ஏற்படுத்தும்.
திரும்பிச் செல்லவும் திரும்பிச் செல்லவும்