ஃபாரெக்ஸ் சந்தையில், எந்தவொரு நிதிச் சந்தையையும் போலவே, தொடர்ச்சியான சவால்களை வர்த்தகர்கள் எதிர்கொள்கின்றனர். அவற்றுள் ஒரு முக்கிய சவால் டெபாசிட் டிராடவுன் ஆகும். இது வர்த்தகத்தின் உள்ளார்ந்த அம்சமாகும், மேலும் ஒவ்வொரு வர்த்தகரும் அதை அனுபவிப்பார்கள். சிலர் மற்றவர்களை விட அடிக்கடி டிராடவுன்களைச் சந்திக்க நேரிடும், இது அனைவருக்கும் தவிர்க்க முடியாத சூழ்நிலை. அதன் தவிர்க்க முடியாத தன்மையை உணர்ந்து அதற்கு மனரீதியாக தயார்படுத்திக் கொள்வது மிக முக்கியமாகும். மேலும், இந்த பின்னடைவுகளில் இருந்து மீள்வதற்கு ஒரு முன் நிறுவப்பட்ட உத்தி அவசியம்; இல்லையெனில், உங்கள் முழு டெபாசிட்டும் அழித்துவிடும் அபாயம் உள்ளது.
டிராடவுன் என்றால் என்ன?
டிராடவுன் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சொத்தின் மதிப்பில் ஏற்படும் சரிவைக் குறிக்கிறது. எளிமையாகச் சொன்னால், நீங்கள் ஒரு நிலையைத் திறக்கலாம், வாங்க ஆர்டர் செய்யலாம், ஆனால் விலை உயருவதற்குப் பதிலாக, அது உங்களுக்கு எதிராக நகரத் தொடங்குகிறது. விலை குறையும்போது, உங்கள் வர்த்தகக் கணக்கின் இருப்பு குறைவதைப் பார்க்கும்போது, உங்கள் மன உறுதியும் குறைகிறது.
அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும், அல்லது குறைந்தபட்சம் அதன் பாதகமான விளைவுகளை எவ்வாறு குறைக்கலாம்? நிறுவப்பட்ட வழிகாட்டிகள் இந்த விஷயத்தில் பின்வரும் பரிந்துரைகளை வழங்குகின்றன:
1. உங்கள் உத்தியை மதிப்பிடுங்கள்: குறிப்பிட்ட சந்தை சூழ்நிலைகளை நீங்கள் கணக்கிடாமல் இருக்கலாம். டெமோ கணக்கில் உங்கள் உத்தியை சோதிக்கவும். இது இழப்புகளை விளைவித்தால், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள்.
2. அபாயத்தை நிர்வகித்தல்: உங்கள் டெபாசிட்டின் பெரும் பகுதியை ஒருபோதும் பணயம் வைக்காதீர்கள். ஒரு வர்த்தகத்தில் உங்கள் டெபாசிட்டில் 1-2% (அதிகபட்சம் 5%)-க்கு மேல் ஆபத்துக்கு முனையவேண்டாம் என்று பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.
3. ஸ்டாப் லாஸ் ஆர்டர்களைப் பயன்படுத்தவும்: ஒரு நிலை திறப்புடன் அவற்றை ஒரே நேரத்தில் வைக்கவும். ஒரு குறிப்பிட்ட இழப்பு நிலையை அடைந்தவுடன், இந்த ஆர்டர்கள் தானாகவே இழக்கும் வர்த்தகத்தை மூடிவிடும்.
4. பல்வகைப்படுத்துதல்: உங்கள் போர்ட்ஃபோலியோவின் ஒட்டுமொத்த அபாயத்தைக் குறைக்க பல்வேறு கருவிகளில் உங்கள் முதலீடுகளைப் பரப்பி வையுங்கள்.
5. கற்றலை நிறுத்தாதீர்கள்: சந்தை எப்போதும் உருவாகிக்கொண்டே இருக்கிறது. எனவே, ஒரு வர்த்தகர் தொடர்ந்து தங்கள் அறிவைப் புதுப்பித்துக் கொண்டே வேண்டும், சமீபத்திய செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும், சந்தைப் பகுப்பாய்வைக் கண்காணிக்க வேண்டும்.
6. அமைதியாக இருங்கள்: ஒரு இழுபறி நிலையில் இருப்பதை நீங்கள் கண்டால், முதலாவது மற்றும் முக்கியமான விஷயம் என்னவெனில் நீங்கள் அமைதியாக இருக்கவேண்டும். பீதி உங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும், அவசர முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
டிராடவுன் போது ஒரு வர்த்தகர் என்ன செய்ய வேண்டும்?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆறு குறிப்புகளும் மதிப்புமிக்கவை ஆகும், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ளபடி, ஃபாரெக்ஸ் சந்தையில் ஒரு டிராடவுன் தவிர்க்க முடியாத நிகழ்வு ஆகும், இது ஒவ்வொரு வர்த்தகரும் விரைவிலோ அல்லது பின்னரோ எதிர்கொள்ளும் ஒன்றாகும். முக்கிய விஷயம் என்னவென்றால், அதற்குத் தயாராக இருக்க வேண்டும், மேலும் அத்தகைய சூழ்நிலைகளுக்கு ஒரு தெளிவான செயல் திட்டம் இருக்கவேண்டும். அதற்கு மூன்று சாத்தியமான அணுகுமுறைகளை நாம் கருத்தில் கொள்வோம்.
1. நஷ்டத்தின் போது வர்த்தகத்தை மூடுவதும் லாக் செய்வதும் (பூட்டுதல்) மிக எளிமையான முறை. இந்த நடவடிக்கை உண்மையில் நேரடியானது, ஆனால் உளவியல் ரீதியாக சவாலானது - நான் நிலையை மூடிய பிறகு, விலை எனக்கு சாதகமாக மாறினால் என்ன செய்வது? அப்புறம், எனக்கு இலாபம் வந்திருக்கலாம்! அதில் கணிசமான ஒன்று! மனித பேராசை ஒரு சக்திவாய்ந்த சக்தி. அதை முறியடிப்பதற்கு முன்பே அமைக்கப்பட்ட ஸ்டாப் லாஸ் ஆர்டர் உதவுகிறது. இருப்பினும், பேராசை இன்னும் இங்கே வெற்றிபெற முடியும் என்பதை அனுபவம் காட்டுகிறது. சில வர்த்தகர்கள், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, தங்கள் ஸ்டாப் லாஸ்ஸை தங்கள் நுழைவுப் புள்ளியில் இருந்து மேலும் மேலும் நகர்த்துகிறார்கள். மற்றவர்கள் இந்த ஆர்டர்களைப் பயன்படுத்துவதே இல்லை, சூதாட்டத்தில் ஈடுபடவும், அதிர்ஷ்டத்தைப் பெறவும் விரும்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, "ஆபத்திற்கு முனையவில்லை என்றால், ஷாம்பெயின் இல்லை" என்ற பழமொழிக்கு ஒரு காரணம் இருக்கிறது.
2. எனவே, உங்கள் நிலை திறந்த நிலையில் உள்ளது, மேலும் விலை உங்களுக்கு எதிராக தொடர்ந்து நகர்கிறது, ஒவ்வொரு நிமிடமும் தற்போதைய இழப்பை அதிகரிக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சில வர்த்தகர்கள் விருப்பம் எண்.2-ஐ நாடுகின்றனர்: அவர்கள் எதிர் திசையில் ஒரு நிலையைத் திறக்கிறார்கள் (ஒரே கரன்சி ஜோடியில் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை), அடிப்படையில் அவர்களின் அபாயங்களைத் தடுக்கிறார்கள். தொழில்முறை வாசகங்களில், இது "லாக்கிங்” (பூட்டுதல்) அல்லது "லாக்” (பூட்டு) என்றும் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், இங்கே ஒரு புதிய சவால் எழுகிறது. இந்த முறையில் ஒரு நிலையைப் பூட்டுவதன் மூலம், தற்போதைய இழப்பின் அளவை நீங்கள் சரிசெய்யலாம். முதன்மை மற்றும் விளிம்பு ஜோடிகளின் விலைப்புள்ளிகள் எப்படி மாறினாலும், இழப்பு மாறாமல் இருக்கும். அதைக் குறைக்க (அல்லது இலாபம் பெறுவதற்கும் கூட), ஒருவர் ஒரு நிலையை மூடுவதற்கு மிகவும் சாதகமான தருணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும், பின்னர் மற்றொன்று. ஆயினும்கூட, அனுபவமுள்ள வர்த்தகர்களுக்கு கூட இதை நிறைவேற்றுவது ஒரு சவாலாக உள்ளது.
3. மேற்கூறிய இரண்டு விருப்பங்களைத் தவிர, மூன்றாவது முறையும் உள்ளது: மார்டிங்கேல் அணுகுமுறை மற்றும் அதன் மேம்பட்ட பதிப்பு, "சராசரி நிலைகள்" என அழைக்கப்படுகிறது. இந்த முறை மில்லியன் கணக்கான வெவ்வேறு சூழ்நிலைகளில் நூறாயிரக்கணக்கான வர்த்தகர்களால் பயன்படுத்தப்படுகிறது. நிபுணத்துவ ஆலோசகர் ரோபோக்களைப் பயன்படுத்தி கைமுறை மற்றும் தானியங்கு வர்த்தகத்திற்கான பல வர்த்தக உத்திகளில் இது இணைக்கப்பட்டுள்ளது. சிலருக்கு, இது வெற்றிக்கு வழிவகுத்தது, மற்றவர்களுக்கு இது முழுமையான நிதி அழிவை ஏற்படுத்தியது. இது தொடர்பான விவாதங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அந்த காரணத்திற்காக, நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துவோம்.
மார்டிங்கேல்: இது குடும்பப்பெயர் அல்ல
நிகழ்தகவு கோட்பாட்டில் மார்டிங்கேல் கருத்துரு 1934-1939க்கு இடையில் தோன்றியது. இருப்பினும், இந்த முறையின் வரலாறு மிகவும் பழமையானது. மார்டிங்கேல் என்பது 18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் தோன்றி அங்கு பிரபலமடைந்த பந்தயம் கட்டும் உத்திகளின் ஒரு வகையைக் குறிக்கிறது. இந்த உத்திகளில் எளிமையானது, ஒரு நாணயத்தை மேலே போட்டு தலை விழுந்தால் பந்தயத்தில் வெற்றி பெற்றதாகவும், பூ விழுந்தால் தோல்வியற்றதாகவும் ஒரு விளையாட்டுக்காக இது வடிவமைக்கப்பட்டது. (சில்லியில் கருப்பு அல்லது சிவப்பு நிறத்தில் பந்தயம் கட்டுவது போன்றது). ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் விளையாடுபவர் பந்தயம் கட்டுவதை இரட்டிப்பாக்குவது இந்த உத்தியில் அடங்கும். ஒரு வெற்றி இறுதியாக நிகழும்போது, அது முந்தைய அனைத்து இழப்புகளையும் ஈடுசெய்து, ஆரம்ப பந்தயத்திற்குச் சமமான இலாபத்தைக் கொடுக்கும்.
தி லா ஆஃப் லார்ஜ் நம்பர்ஸ் (பரினங்களின் நியதி)-இன்படி, தலை அல்லது பூவில் நாணயம் விழுவதற்கான நிகழ்தகவு (அல்லது சில்லியில் கருப்பு மற்றும் சிவப்பு) 50%-ஐ நெருங்குகிறது. எனவே, எண்ணற்ற டாஸ்கள் (பூவா தலையா) கொடுக்கப்பட்டால், மார்டிங்கேல் உத்தி இறுதியில் விளையாடுபருக்கு வெற்றியைத் தரும். ஆனால் இது விளையாடுபருக்கு எல்லையற்ற செல்வம் இருப்பதாகவும், ஒரு பந்தயத்தின் அளவிற்கு வரம்பு இல்லை என்றும் இது கருதுகிறது. இருப்பினும், விளையாடும் எந்த ஒருவரும் அத்தகைய மூலதனத்தைக் கொண்டிருக்கவில்லை, மேலும் பந்தயங்களின் அதிவேக வளர்ச்சி அவர்களை திவாலாக்கும்.
1943ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க கேசினோவில் சில்லியின் மிக நீண்ட தொடர்ச்சியான கோடுகள் பதிவு செய்யப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது, அங்கு சிவப்பு நிறம் தொடர்ச்சியாக 32 முறை வந்தது. இதன் நிகழ்தகவு (நிகழ்வதற்கான சாத்தியம்) மிகவும் சிறியது, ஆனால் அது நடந்தது. இதை விளையாடுபவர் ஆரம்பத்தில் பந்தயம் $1 கட்டியிருந்தால், 32வது பந்தயம், தொடர்ந்து இரட்டிப்பாக்கப்பட்ட பிறகு, $2.147 பில்லியனாக இருந்திருக்கும்! மேலும் இதற்கான வெகுமதி வெறும் $1 ஆக இருந்திருக்கும்.
ஏற்றத்துக்குரியதை வாங்குதல் அல்லது சராசரி நிலைகளுடன் வர்த்தகம்
ஃபாரெக்ஸில், மார்டிங்கேல் முறையின் கொள்கை அதேபோன்றது: ஒவ்வொரு இழந்த வர்த்தகத்திற்கும் பிறகு, அடுத்த வர்த்தகத்தின் அளவு அதிகரிக்கப்படுகிறது. அடுத்த வர்த்தகமும் நஷ்டமாக இருந்தால், நிலை அளவு மீண்டும் இரட்டிப்பாகும், மேலும் வெற்றிகரமான வர்த்தகம் நிகழும் வரை, இது கோட்பாட்டில் முந்தைய அனைத்து இழப்புகளுக்கும் ஈடுசெய்ய வேண்டும். புரிந்துகொள்ளக்கூடிய வகையில், இத்தகைய எளிமையான முறை நிதிப் பேரழிவுகளுக்கு வழிவகுத்தது, எனவே சீராக்கம் தேவை. அத்தகைய ஒரு சீராக்கம் சராசரி நிலைகளுடனான வர்த்தகம் (Averaging Positions) ஆகும்.
உதாரணம்: ஒரு வர்த்தகர் ஒரு குறிப்பிட்ட சொத்தை அது உயரும் என்று எதிர்பார்த்து, 1.2000-இல் வாங்கினார் என்று வைத்துக்கொள்வோம். இருப்பினும், விலை வீழ்ச்சியடையத் தொடங்கியது மேலும் அது 1.1900-ஐ எட்டியது. வர்த்தகர் தங்கள் ஆரம்ப பகுப்பாய்வில் நம்பிக்கையுடன் இருந்தால், சந்தை விரைவில் தங்கள் நிலைக்குச் சாதகமாக மாறும் என்று நம்பினால், அவர்கள் இந்தச் சொத்தின் மற்றொரு தொகுப்பை தற்போதைய விலையான 1.1900-இல் வாங்கலாம். அதாவது சராசரி நுழைவு விலை 1.1950 ஆக இருக்கும். இந்நிலையை உடைக்க, சொத்து விலை இந்த நிலையை அடைய வேண்டும், ஆரம்ப 1.2000 அல்ல.
இருப்பினும், வர்த்தகச் சிந்தனை வளர்ச்சி பெற்றுள்ளது, மேலும் காலப்போக்கில் மிகவும் சிக்கலான பதிப்புகள் வெளிவந்துள்ளன, அவற்றில் பல நிபுணர் ஆலோசகர்களைப் பயன்படுத்தி அல்காரிதம் வர்த்தகத்திற்கு அடித்தளமாக உள்ளன. இந்த உத்திகளின்படி, பல்வேறு போக்கு குறிகாட்டிகள் மற்றும் ஆஸிலேட்டர்கள், ஃபைபோனச்சி நிலைகள், ஆதரவு/எதிர்ப்பு நிலை மீறல்கள், அலை பகுப்பாய்வு மற்றும் பலவற்றின் சமிக்ஞைகளைப் பொறுத்து, தொழில்நுட்ப பகுப்பாய்வு முடிவுகளின் அடிப்படையில், புதிய வர்த்தகங்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்ட தூரங்களில் திறக்கப்படுகின்றன. இதற்கிடையில், அடுத்தடுத்த நிலையின் அளவு (லாட் அளவு) வெறுமனே இரட்டிப்பு ஆக்கப்படவில்லை, ஆனால் மிகவும் சிக்கலான சூத்திரங்களைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. இத்தகைய வழிமுறைகள் விரும்பிய இலாபங்கள், ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு ஆபத்து, பல அளவுருக்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.
இங்கே மாறுபாடுகளின் தேர்வு முடிவற்றது. ஆனால், முக்கியக் கோட்பாடு அப்படியே உள்ளது: ஒரு வர்த்தகர் ஒரு நிலையைத் திறந்து, விலை அவர்களுக்கு எதிராக நகர்ந்தால், அவர்கள் மற்றொரு நிலையை (பின்னர் மற்றொன்று, மற்றொன்று) முதல் இழந்த நிலையின் அதே வழியில் ஆனால் பெரிய அளவில் திறக்கிறார்கள். விலை தங்களுக்குச் சாதகமாக மாறும்போது, அவர்கள் சமமாக அல்லது இலாபம் ஈட்ட முடியும் என்பதற்காக இது செய்யப்படுகிறது. இந்த உத்திகளின் முதன்மையான, மற்றும் ஒரே நன்மை இதுவாகும். அடுத்து, முக்கிய அபாயங்களை பட்டியலிடுவது அவசியம்:
1. வர்த்தகரின் நிலைக்கு எதிராக சந்தை தொடர்ந்து நகர்ந்தால், திறந்த நிலைகளின் அதிகரிப்பு காரணமாக இழப்புகள் துரிதப்படுத்தப்படும்.
2. ஒரு குறுகிய தொடர் இழப்பு வர்த்தகம் கூட டெபாசிட்டின் குறிப்பிடத்தக்க டிராடவுனுக்கு வழிவகுக்கும். கிடைக்கக்கூடிய விளிம்பு நிலை குறைகிறது, ஸ்டாப்-அவுட் நிலையை அடையும்போது தரகர் மூலம் கட்டாய நிலை மூடப்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
3. வர்த்தகர் உணர்ச்சிவயப்படல், உளவியல் அழுத்தம், நஷ்டம் மிகத் தெளிவாகத் தெரியும்.
4. "கருப்பு ஸ்வான்ஸ்" போன்ற நிகழ்வுகளையும் ஒருவர் கருத்தில் கொள்ளவேண்டும்: விரைவான மற்றும் எதிர்பாராத சந்தை நகர்வுகள், எந்தவொரு, நன்கு சிந்திக்கப்பட்ட, வர்த்தக உத்திகளையும் அழிக்கக்கூடும்.
இதனால்தான் அனுபவம் வாய்ந்த வர்த்தகர்கள் புதிய நிலைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பரிந்துரைக்கின்றனர், ஏனெனில் சந்தை தலைகீழாக மாறாது. அபாயங்களை முன்கூட்டியே கணக்கிடுவதும், மனரீதியாக தயாராக இருப்பதும், தன்னைத்தானே வெல்வதும், இழக்கும் நிலைகளை சரியான நேரத்தில் மூடுவதும் முக்கியம். ஒவ்வொரு அடியும் நன்கு யோசித்து எடுத்த முடிவுகளின் விளைவாக இருக்க வேண்டும். நினைவில் கொள்ளவும்: நிதிச் சந்தைகளில் வர்த்தகத்தில், பகுத்தறிந்து செய்யும் நடவடிக்கைகள் வெற்றிக்கு வழிவகுக்கும், அதே சமயம் மனக்கிளர்ச்சியானது இழப்புகளுக்கு நேரடி பாதையாகும்.
திரும்பிச் செல்லவும் திரும்பிச் செல்லவும்